எத்தியோப்பியாவில் பதற்றம் நீடிப்பு: 80 பேர் உயிரிழப்பு

எத்தியோப்பியாவில் நீடிக்கும் பதற்ற சூழலில் 80க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்திருக்கும் நிலையில் தலைநகர் அடிடாஸ் அபாபாவில் ஆயுத கும்பல்கள் சுற்றித் திரிவதால் அங்கு இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

பிரபல பாடகர் ஹாகாலு ஹுன்டீசா கடந்த திங்கட்கிழமை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்தே அங்கு ஆர்ப்பாட்டம் வெடித்துள்ளது.

தலைநகரில் அயுதக் கும்பல்கள் சுற்றித் திரிவதோடு வேறு இனக் குழுக்களை இலக்குவைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. கொல்லப்பட்ட பாடகர் நாட்டின் பெரும்பான்மை இனக் குழுவான ஒரோமோ இனத்தைச் சேர்ந்தவராவார்.

எனினும் தம் மீது பாகுபாடு காண்பிக்கப்படுவதாகவும் உரிமை மீறல்கள் இடம்பெறுவதாகவும் இந்த இனக் குழுவினர் நீண்ட காலமாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

தலைநகரின் பல பகுதிகளிலும் துப்பாக்கிச் சத்தங்கள் கேட்பதாகவும் கத்தி, கம்புகளுடன் ஆயுத கும்பல்கள் சுற்றித் திரிவதாகவும் தலைநகர குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Fri, 07/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை