இரத்மலானை தொழிற்பயிற்சி பல்கலைக்கு 6 மாடிக் கட்டிடம்

அமைச்சர் பந்துலவினால் ரூ. 927 மில். ஒதுக்கீடு

இரத்மலானை தொழிற்பயிற்சி பல்கலைக்கழகத்திற்ககாக 927 மில்லியன் ரூபா செலவில் விடுதி, பணித் தொகுதி, உணவகம் உள்ளிட்ட ஆறு மாடிக் கட்டிடம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உயர்கல்வி, தொழில்நுட்பம், தகவல் தொடர்பாடல் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த செயற்திட்டத்திற்காக 927.34 மில்லியன் ரூபா செலவிட திட்டமிடப்பட்டுள்ளதுடன்வெவ்வேறாக மூன்று கட்டிடத் தொகுதிகள் நிர்மாணிப்பதற்கு 2017 ஆம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

எனினும் மேற்படி கட்டிடத் தொகுதி ஆற்றுக்கு அருகாமையில் உள்ள காணியில் தனித்தனி கட்டிடங்களாக நிர்மாணிப்பதற்கு அதிகளவு நிதி செலவாகும் என்பதால் அந்தக் காணியை முழுமையாகப் பயன்படுத்தி அதிக பலன் தரும் வகையில் ஆறு மாடி கட்டிடமாக மேற்படி கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு கடந்த ஜூலை 8ம் திகதி கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.(ஸ 

Tue, 07/14/2020 - 09:37


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை