சீனாவின் 5 பிராந்தியங்களில் புதிய வைரஸ் கொத்தணிகள்

வட கிழக்கு சீனாவில் துறைமுக நகர் ஒன்றில் தோன்றிய புதிய கொரோனா வைரஸ் கொத்தணி ஏனைய மாகாணங்களுக்கு பரவி இருக்கும் நிலையில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்றை கடுமையான முடக்க நிலை மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை விதித்து அந்த நாடு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.

எனினும் அண்மைய வாரங்களில் சிறிய அளவிலான நோய்த் தொற்று சம்பவங்கள் கவலையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று சீனாவில் புதிதாக 68 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது கடந்த ஏப்ரல் தொடக்கம் நாளொன்றில் பதிவான அதிக எண்ணிக்கையாக உள்ளது.

இதில் 57 பேர் வடமேற்கு பிராந்தியமான சின்ஜியாங்கில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதோடு தலைநகரான உரும்கியில் கடுமையான முடக்க நிலை அமுபடுத்தப்பட்டு மில்லியன் கணக்கான குடிமக்கள் மீது சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டாலியன் துறைமுக நகரில் ஆறு புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த கொரோனா கொத்தணி தற்போது ஐந்து பிராந்தியங்களில் ஒன்பது நகரங்களுக்கு பரவி இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Wed, 07/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை