அமெரிக்காவில் ஒரே நாளில் 50,000 பேருக்கு கொரோனா

அமெரிக்காவில் கடந்த புதன்கிழமை கொரோனா வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் சுமார் 50,000ஐ எட்டியுள்ளது. இது அந்நாட்டில் நோய்த் தொற்று ஆரம்பித்தது தொடக்கம் ஒருநாளில் ஏற்பட்ட அதிகூடிய பாதிப்பாக உள்ளது.

அமெரிக்காவில் நாளாந்த நோய்த் தொற்றுச் சம்பவங்கள் 100,000ஐ எட்டக் கூடும் என்று அரசின் பிரதான தொற்றுநோய் நிபுணர் எச்சரித்திருக்கும் நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜூன் முதல் வாரத்தில் அமெரிக்காவில் நாள்தோறும் சுமார் 22,000 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகின. எனினும் நாட்டின் தெற்குப் பகுதி எங்கும் புதிய மையப் புள்ளிகள் தோன்ற ஆரம்பித்தன. இந்நிலையில் கடந்த ஏழு நாட்களில் தேசிய அளவில் நாளாந்த தொற்று எண்ணிக்கை 42,000 ஆக இரட்டிப்பாகியுள்ளது.

புதிய நோய்த் தொற்று சம்பவங்களில் பாதிக்கும் அதிகமானவை அரிசோனா, கலிபோர்னியா, புளோரிடா மற்றும் டெக்சாஸ் மாநிலங்களில் பாதிவாகியுள்ளன.

உலகில் கொரோனா வைரஸ் தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக இருக்கும் அமெரிக்காவில் 2.7 மில்லியன் நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு ஒரு இலட்சத்தி 30 ஆயிரத்திற்கு அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

Fri, 07/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை