Header Ads

போதைப் பொருள் குற்றச்செயலுடன் தொடர்புபட்டிருந்த 439 பேர் கைது

கொழும்பில் 48 மணிநேர சுற்றிவளைப்பு;

நாடளாவிய ரீதியில் முதலாம் திகதி தொடக்கம் நேற்று முன்தினம் நள்ளிரவு வரையிலான காலப்பகுதியில் போதைப்பொருள் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 439 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடகப்பிரிவு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த காலப்பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் மோசடியுடன் தொடர்புடைய 239 பேரும் கஞ்சா போதைப் பொருளுடன் 199 பேரும் ஐஸ் போதைப்பொருளுடன் தொடர்புடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த காலப்பகுதியில் 5 சட்டவிரோத ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் சந்தேக நபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சட்டவிரோத மதுபான மோசடியுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 345 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதன்போது 6 ஆயிரத்து 128 லீற்றர் சட்ட விரோத மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள 306 சந்தேக நபர்களும், வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 638 சந்தேக நபர்களும், இக் காலப்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Sat, 07/04/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.