35 நாட்களாக கடலில் இருந்த 57 மீனவர்களுக்கு கொரோனா

ஆர்ஜன்டீனாவில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின் கடலுக்குச் சென்று 35 நாட்கள் இருந்து விட்டு திரும்பிய 57 மீனவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கும் மர்மத்தை விடுவிக்க மருத்துவர்கள் முயன்று வருகின்றனர்.

எச்சிசென் மரு என்ற மீன்பிடிக் கப்பலில் இருந்த சிலருக்கு கொவிட்-19 நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்ததை அடுத்து கரைக்கு திரும்பி இருப்பதாக டீர்ரா டெல் பியுகோ மாகாண சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

61 பேர் இருந்த அந்தக் கப்பலில் 57 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அனைத்து மீனவர்களும் உசுவாயா நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

“இவர்கள் 35 நாட்களாக நிலத்துடன் எந்தத் தொடர்பும் இல்லாத நிலையில் இவர்களுக்கு எவ்வாறு நோய்த் தொற்று ஏற்பட்டது என்பதை புரிந்துகொள்வது கடினமாக உள்ளது” என்று டீர்ரா டெல் பியுகோ மாகாண ஆரம்ப சுகாதார பராமரிப்பு பணிப்பாளர் அலசென்ட்ரா அல்பாரோ தெரிவித்துள்ளார்.

Wed, 07/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை