சூடானில் ஆயுததாரிகளின் தாக்குதலில் 20 பேர் பலி

சூடானின் போர் பதற்றம் கொண்ட டபூர் மாகாணத்தில் கடந்த பல ஆண்டுகளில் முதல் முறை விவசாய நிலங்களுக்கு திரும்பிய மக்கள் மீது துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் சிறுவர்கள் உட்பட குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

டபூர் மாகாணத் தலைநகர் நியாலாவில் இருந்து தெற்காக 90 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் அபெளடோசில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாக பழங்குடித் தலைவர் இப்ராஹிம் அஹமது தொலைபேசி ஊடே ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு கடந்த சனிக்கிழமை குறிப்பிட்டுள்ளார்.

2003 ஆம் ஆண்டு தொடக்கம் இடம்பெற்று வரும் மோதல்களில் டபூரில் 300,000 பேர் வரை கொல்லப்பட்டு 2.5 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

இதில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தாக்குதலில் கொல்லப்பட்ட பெரும்பாலானவர்கள் இடம்பெயர்ந்த விவசாயிகளாவர். நிலச் சொந்தக்காரர்கள் மற்றும் அந்தக் காணியை கைப்பற்றியவர்களுக்கு இடையே அரசின் அனுசரணையில் இடம்பெற்ற உடன்படிக்கையை அடுத்து இவர்கள் தமது சொந்த விவசாய நிலத்திற்கு திரும்பியபோதே தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

Mon, 07/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை