கொவிட்-19: அவுஸ்திரேலியாவின் இரண்டு மாநிலங்களுக்குப் பூட்டு

மெல்போர்னில் கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் அதிகரித்ததை அடுத்து அவுஸ்திரேலியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களான விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் எல்லைகள் மூடப்பட்டுள்ளன.

விக்டோரிய தலைநகரில் கடந்த இரு வாரங்களில் நூற்றுக் கணக்கான நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது அந்நாட்டின் புதிய வைரஸ் தொற்றின் 95 வீதத்திற்கும் அதிகமாக உள்ளது. 

இதுவரை இரு மாநிலங்களும் தொடர்ந்து திறக்கப்பட்டிருந்தபோதும் ஏனைய மாநிலங்களே இந்த மாநிலங்களின் எல்லைகளை மூடி இருந்தன.

இந்நிலையில் வரும் புதன்கிழமை இந்த மாநிலங்கள் மூடப்பட்டு அனுமதி பெற்றவர்களுக்கு மாத்திரமே பயணிக்க கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது.

முன்னதாக வெளிநாட்டில் இருந்து வருபவர்களிடமே நோய்த் தொற்று சம்பவங்கள் அதிகமாக பரவி வந்த நிலையில் தற்போது 80 வீதமான சம்பவங்கள் சமூகத்திற்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

விக்டோரியாவில் நேற்று புதிதாக 127 நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி உள்ளன. இது கொரோனா தொற்று ஆரம்பித்தது தொடக்கம் அங்கு பதிவாகும் நாளாந்த அதிகபட்ச நோய்த் தொற்று சம்பவங்களாகும். 

Tue, 07/07/2020 - 07:49


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை