கொவிட்-19: குடியரசு கட்சி மாநாடு ரத்து

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் நடைபெறவிருந்த குடியரசுக் கட்சியின் மாநாட்டை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ரத்துசெய்வதாகக் கூறியுள்ளார்.

அடுத்த மாதம் நடக்கவிருந்த மாநாட்டை கொவிட்-19 காரணமாகரத்து செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். பெரும் கூட்டத்தை எதிர்பார்க்கக்கூடிய மாநாட்டை நடத்த இது சரியான நேரம் இல்லை என்று குறிப்பிட்ட டிரம்ப், பாதுகாப்புக் குறித்த அக்கறையைச் சுட்டிக்காட்டினார்.

புளோரிடாவில் அண்மைக் காலமாக வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ள நிலையில் மாநாடு ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநாடுகள் எதோ ஒரு விதத்தில் இணையம் வழி நடைபெறும் என்று ஜனாதிபதி டிரம்ப் கூறினார். ஜனாதிபதி தேர்தலில் தம்மை வேட்பாளராக நியமிக்கும் கட்சிப் பேராளர்களை, வடக்கு கரோலினாவில் சிறிது நேரம் சந்திக்கப்போவதாக டிரம்ப் கூறினார். கொரோனா வைரஸ் தொற்றினால் உலகில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக இருக்கும் அமெரிக்காவில் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை நான்கு மில்லியனைத் தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sat, 07/25/2020 - 06:45


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை