டெஹ்ரான் மருத்துவமனையில் பாரிய வெடிப்பு: 19 பேர் பலி

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பு ஒன்றில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

சினா அதார் மருத்துவமனையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் பலரும் காயமடைந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டது.

எரிவாயு கசிவினால் இந்த வெடிப்பு நிகழ்ந்திருப்பதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் ஈரானின் அரச ஊடகத்திற்கு தெரிவித்தார். வானை நோக்கி புகை எழும் காட்சிகளை தொலைக்காட்சி படங்கள் காட்டுகின்றன.

தீயை அணைக்க தீயணைப்புப் படையினர் பல மணி நேரம் போராடினர். இந்த வெடிப்பில் அதிகம் பெண்களே உயிரிழந்திருப்பதாக நிர்வாகத்தினர் குறிப்பிட்டுள்ளனர். இதில் மேல் மாடியில் சத்திரசிகிச்சை அறையில் இருந்த நோயாளிகள் மற்றும் சிகிச்சை அளித்து வந்தவர்களும் உயிரிழந்தவர்களில் இருப்பதாக டெஹ்ரான் தீயணைப்புத் திணைக்கள பேச்சாளர் ஜலால் மலாக்கி குறிப்பிட்டார்.

ஊஷ்னம் மற்றும் புகைமூட்டம் காரணமாக துரதிருஷ்டவசமாக அவர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார். தீயணைப்புப் படையினர் 20 பேரை மீட்டுள்ளனர்.

Thu, 07/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை