கொவிட்–19 மெக்சிகோவில் உயிரிழப்பு 30,000ஐ தாண்டியது

கொரோனா வைரஸ் தொற்றினால் மோசமாக பாதிக்கப்பட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில் உயிரிழப்பு எண்ணிக்கை 30,000ஐ தாண்டியுள்ளது.

கடந்த சனிக்கிழமை மேலும் 523 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 30,366 ஆக உயர்ந்திருப்பதாக மெக்சிகோ சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி கொரோனா வைரஸ் தொற்றினால் அதிக உயிரிழப்பு பதிவான நாடுகளில் பிரான்ஸை பின்தள்ளி மெக்சிகோ ஐந்தாவது இடத்திற்கு உயர்ந்துள்ளது. பிரான்சில் 29,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த சனிக்கிழமை 9,914 பேருக்கு நோய்த் தொற்று உறுதியாகி இருக்கும் நிலையில் மெக்சியோவில் மொத்த நோய்த் தொற்றாளர்கள் எண்ணிக்கை 252,165 ஆக உயர்ந்துள்ளது.

எனினும் முறை யான வகையில் சோதனைகள் மேற்கொள்ளப்படாத நிலையில் உண்மையான உயிரிழப்பு மற்றும் நோய்த் தொற்று எண்ணிக்கை கூறப்படுவதை விடவும் அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

Mon, 07/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை