மியன்மார் சுரங்க விபத்து: உயிரிழப்பு 162ஆக உயர்வு

வடக்கு மியன்மாரின் பச்சை மாணிக்கக் கல் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்திருப்பதோடு அந்த எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுரங்கத்தின் குப்பை மலை ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை அங்குள் ஏரியின் மீது சரிந்ததில் சுரங்கத் தொழிலாளர்கள் பலரும் சேற்று மண்ணிற்குள் புதையுண்டனர். தேடுதல் நடவடிக்கைகள் இரண்டாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது.

கடந்த வியாழக்கிழமை பின்னேரம் ஆகும்போது 162 சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன. 161 பேர் உயிரிழந்ததாகவும் 43 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் அமைச்சின் உள்ளூர் அதிகாரி ஒருவர் நேற்று குறிப்பிட்டார்.

பாதி சடலங்கள் இன்னும் அடையாளம் காணப்படாமல் உள்ளன. இந்த சுரங்கத்தை ஒட்டி குடியேறிகள் பலரும் சிறிய கூடாரங்களில் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹ்பகண்ட் மாநிலத்தில் இருக்கும் இந்த சுரங்கத்தில் சுரங்கத் தொழிலாளர்கள் பச்சை மாணிக்கக் கற்களை சேகரித்துக் கொண்டிருந்தபோது கனமழை காரணமாக சேற்றுமண் சரிந்து அவர்கள் புதையுண்டதாக தீயணைப்பு சேவைத் திணைக்களம் தனது பேஸ்புக் கப்பத்தில் குறிப்பிட்டிருந்தது.

பருவமழை சுரங்கத்தில் உள்ள அபாயங்களை மேலும் மோசமாக்கும் என அங்குள்ள தீயணைப்புத் துறை தெரிவித்தது.

 

Sat, 07/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை