கொரில்லாவை கொன்றவருக்கு உகண்டாவில் 11 ஆண்டு சிறை

உகண்டாவில் பெரிதும் அறியப்பட்ட ரபிக்கி என்ற பெயர் கொண்ட கொரில்லா மனிதக் குரங்கை கொன்றவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  

பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு சட்டவிரோதமாக நுழைந்து மனிதக் குரங்கை கொன்றதாக பெலிக்ஸ் ப்யமுகாமா என்ற அந்த ஆடவர் குற்றங்காணப்பட்டார். எனினும் அந்த மனிதக் குரங்கு தம்மை தாக்கியதால் தற்காப்பிற்காக ரபிக்கியை கொல்ல வேண்டி ஏற்பட்டதாக ப்யமுகாமா தெரிவித்துள்ளார்.  

உலகின் அழிவில் உள்ள மலை கொரில்லாக்கள் தற்போது 1,000 வரையே எஞ்சி இருப்பதாக உகண்டா வனவள அதிகாரசபை தெரிவித்துள்ளது. டுய்கர் என்று அழைக்கப்படும் சிறிய மான் மற்றும் காட்டுப் பன்றி ஒன்றை கொன்றது மற்றும் அந்த இரு விலங்குகளினதும் இறைச்சியை வைத்திருந்ததாகவும் ப்யமுகாமா குற்றங்காணப்பட்டார்.  

கடந்தஜுன்1 ஆம்திகதிகாணாமல்போனரபிக்கிகொரில்லாகடும்தேடுதலைஅடுத்துஅடுத்துநாள்அதன்உடல்கண்டுபிடிக்கப்பட்டது. அந்தமனிதக்குரங்குகூரியஆயுதத்தால்தாக்கப்பட்டேகொல்லப்பட்டிருப்பதாகவிசாரணையில்தெரியவந்தது.   

Fri, 07/31/2020 - 14:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை