ஒரு அலகு ரூ. 10 வீதம் சூரிய சக்தி மின்சாரம்

குறைந்த விலைக்கு சூரிய சக்தி மின்சாரம் கொள்வனவு செய்ததால் மின்சார சபைக்கு 2,737 மில்லியன் ரூபா இலாபம் கிடைத்ததாக மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இந்த வருடத்தின் மூன்றாம் காலாண்டில் ஒரு அலகு 10 ரூபா வீதம் 150 மெகா வோட்ஸ் சூரியசக்தி மின்சாரம் கொள்வனவு செய்யப்பட்டது.  

குறைந்த விலையில் வழங்கும் நிறுவனங்களிடமிருந்து இவ்வாறு மின்சாரம் பெறப்பட்டுள்ளது. ஒரு மெகா வோட்ஸ் மின்சாரம் கொள்வனவு மூலம் 50 ஆயிரம் ரூபா சேமிக்க முடிந்துள்ளது. நாளாந்தம் 7,50,000 ரூபா சேமிக்க முடிந்துள்ளது.

இதனூடாக வருடாந்தம் 2,737 மில்லியன் ரூபா இலாபமீட்ட முடியும்.  

நான்காம் காலாண்டில் மேலும் 15 மொகா வோட்ஸ் மின்சாரம் கொள்வனவு செய்யப்பட இருக்கிறது. நஷ்டத்தில் இயங்கும் மின்சார சபை 2023 ஆண்டில் இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. சகல அரச நிறுவனங்களையும் இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றுவதே அரசின் இலக்காகும் என்றும் அவர் தெரிவித்தார். 

Fri, 07/31/2020 - 10:27


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை