Header Ads

லிந்துலை, அக்கரகந்தை தோட்டத்தில் திடீர் தீ; 10 வீடுகள் எரிந்து நாசம்

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் பிளான்டேசனுக்கு சொந்தமான லிந்துலை, அக்கரகந்தை தோட்டத்தில் உள்ள 05ஆம் இலக்க தோட்டத் தொழிலாளர்களின் தொடர் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக அக்குடியிருப்பில் உள்ள 10 வீடுகள் முற்றாக எரிந்து நாசமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் இன்று (28)  முற்பகல் 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த தொடர் குடியிருப்பில் ஏற்பட்ட தீயை  பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதிலும்,தொழிலாளர்களின் அத்தியாவசிய ஆவணங்கள், உடுதுணிகள், தங்கநகைகள் உட்பட அனைத்தும் சேதமடைந்துள்ளதாக, பிரதேசவாசிகள்தெரிவித்தனர்.

தீ விபத்துக் காரணமாகப் பாதிப்புக்குள்ளான 09 குடும்பங்களைச் சேர்ந்தவர்களை அப்பகுதியில் உள்ள கலாசார மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சமைத்த உணவை வழங்குவதற்கான நடவடிக்கையினை தோட்ட நிர்வாகம் மற்றும் கிராம சேவகர் பிரிவு இணைந்து மேற்கொண்டுள்ளது.

(ஹட்டன் விசேடநிருபர்- கே.சுந்தரலிங்கம்)

Tue, 07/28/2020 - 13:16


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.