நெல் கொள்வனவுக்காக திறைசேரி 10,400 மில்லியன் ஒதுக்கீடு

அரசாங்கத்தின் நெல் கொள்வனவு வேலைத்திட்டத்தின் கீழ் இம்முறை 50 ரூபா உத்தரவாத விலையில் நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளதுடன் அதற்கென 10,400 மில்லியன் ரூபாவை திறைசேரி ஒதுக்கியுள்ளது.

இந்த செயற்திட்டத்தின் ஆரம்ப கட்டமாக சிறுபோகத்தில் அறுவடைசெய்யும் 200,000 மெற்றிக் தொன் நெல்லை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

அதற்கான நிதி அரச வங்கிகளூடாக நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு திறைசேரி மூலம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டைக் கட்டியெழுப்பும் சௌபாக்கிய நாடு வேலைத்திட்டத்தின் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நெல் ஒரு கிலோவை 50 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ளவும் அதனை உத்தரவாத விலையாக மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

அதற்கிணங்க நாடளாவிய ரீதியிலுள்ள நெல் களஞ்சியசாலைகள் தற்போது தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் நாடு நெல் ஒரு கிலோ 38 ரூபாவுக்கும் சம்பா நெல் ஒரு கிலோ 41 ரூபாவுக்கும் கொள்வனவு செய்யப்பட்டுள்ள நிலையில் இம்முறை நெல் ஒரு கிலோவுக்கு 50 ரூபா என்ற உத்தரவாத விலையை அரசாங்கம் வழங்கியுள்ளது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 07/28/2020 - 13:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை