தபால்மூலம் வாக்களிக்க ஆகஸ்ட் 04 இல் சந்தர்ப்பம்

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் முகாம்களில்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு தபால்மூல வாக்குகளை அளிப்பதற்காக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 04ஆம் திகதி சந்தர்ப்பம் வழங்க எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று முன்தினம் நடைபெற்ற விசேட சந்திப்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.  தபால்மூல வாக்களிப்பு கடந்த 13,14,15,16ஆம் திகதிகளில் நடைபெற்றதுடன் இன்று 17ஆம் திகதியும் வாக்களிப்பு நடைபெறும்.

இந்த ஐந்து தினங்களிலும் வாக்களிக்க முடியாது போனவர்களுக்கு எதிர்வரும் 20,21ஆம் திகதிகளில் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல அரச ஊழியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியவர்களுடன் தொடர்பை பேணியிருந்ததன் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் 04ஆம் திகதி வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுக்கொடுப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு ஆலோசித்துள்ளதாகவும் மஹிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.

 

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 07/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை