NIC ஒரு நாள் சேவை ஆரம்பம்

பிரதேச செயலகத்தில்  முன்பதிவு அவசியம்

தேசிய அடையாள அட்டை வழங்கும் ஒருநாள் சேவை நேற்று முதல் மீண்டும் நாளாந்தம், மட்டுப்படுத்தப்பட்ட வகையில் ஆரம்பமாகியுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

பத்தரமுல்லயிலமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் நாளாந்தம் 250 பேருக்கு தேசிய அடையாள அட்டை விநியோகிக்கப்படவுள்ளது. காலியில் அமைந்துள்ள தென் மாகாண அலுவலகத்தில் நாளாந்தம் 50 அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன. தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள எதிர்ப்பார்ப்பவர்கள், கிராம உத்தியோகத்தரால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட விண்ணப்பப்படிவத்தை பிரதேச செயலகத்திலுள்ள அடையாள அட்டை கிளை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். 10 அலுவலக நாட்களுக்குள், வருகை தர உகந்த நாள் மற்றும் நேரத்தை ஒதுக்கி இலக்கமொன்றையும் பெற்றுக்கொள்ள வேண்டும். இதன்பின்னர் அந்தத் தினத்தில் தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்து தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும் என ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது

Tue, 06/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை