பொதுமக்கள் பார்வைக்கு MCC மீளாய்வு அறிக்கை

மும்மொழியிலும் இணையத்தில் வெளியீடு

“மிலேனியம் சவால்” MCC தொடர்பான மீளாய்வுக் குழுவின் இறுதி அறிக்கை கீழ் வரும் இணையத்தளங்களின் ஊடாக தற்போது பொது மக்கள் பார்வையிட முடியுமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

MCC திட்டத்தை மீளாய்வு செய்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , 2020 ஜனவரி 01ஆம் திகதி நான்கு பேர் கொண்ட குழுவொன்றை நியமித்தார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர் லலிதசிறி குணருவன் குழுவின் தலைவராவார். போக்குவரத்து அமைச்சின் முன்னாள்  செயலாளர் கலாநிதி டி.எஸ்.ஜயவீர, ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் ஜயவர்தன மற்றும் பட்டயக் கட்டிடக் கலைஞர் நாலக்க ஜயவீர ஆகியோர் இக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.குழுவின் இறுதி அறிக்கை 2020 ஜூன் 25ஆம் திகதி பேராசிரியர் லலிதசிறி குணருவன் அவர்களினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இவ்வறிக்கையின் உள்ளடக்கத்தை மக்கள் அறிந்துகொள்வதற்காக பகிரங்கப்படுத்துமாறு ஜனாதிபதி தனது செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.

கீழ்வரும் இணைய முகவரிகளினூடாக அறிக்கையை பார்வையிட முடியும்.

www.president.gov.lk
Link 1:
http://www.pmdnews.lk/si/mcc-review-final-report-presented-to-president/
Link 2:
https://www.president.gov.lk/wp-content/uploads/2020/06/අවසන්-වාර්තාව.pdf

www.presidentsoffice.lk
Link 1:
https://www.presidentsoffice.gov.lk/index.php/2020/06/25/mcc-review-final-report-presented-to-president-2/?lang=ti

www.pmdnews.lk
http://www.pmdnews.lk/ta/mcc-review-final-report-presented-to-president/

Mon, 06/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை