பாதுகாப்புச் சபையின் ஐந்து இடங்களுக்கு நாடுகள் தேர்வு

ஐ.நா பாதுகாப்புச் சபையில் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான ஐந்து உறுப்பு நாடுகள் பொதுச் சபையில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளன. இதற்கான மேற்கத்தேய மற்றும் ஆபிரிக்க ஆசனங்களுக்கு போட்டி நிலவி வருகிறது.

ஒரு ஆசனத்திற்கு கென்யா மற்றும் டிஜிபுடிக்கு இடையே போட்டி நிலவுவதோடு, மேற்கந்தேய பிராந்தியத்தில் கனடா, அயர்லாந்து மற்றும் நோர்வே நாடுகள் இரண்டு இடங்களுக்கு போட்டியிடுகின்றன.

பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்துவத்தை பெற முயற்சிக்கும் இந்தியா ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் போட்டியின்றி தமது இடத்தை உறுதி செய்திருப்பதோடு லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தியத்தில் மெக்சியோ இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ஆபிரிக்க பிராந்தியத்தில் தமக்குள் ஒரு நாட்டை தேர்வு செய்வதில் தோல்வி அடைந்திருக்கும் நிலையிலேயே இரு நாடுகள் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. பாதுகாப்புச் சபையின் தற்காலிக உறுப்பினராவதற்கு பொதுச் சபையில் மூன்றில் இரண்டு வாக்குகளை பெறவேண்டி உள்ளது. பாதுகாப்புச் சபையில் பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகிய ஐந்து நிரந்தர அங்கத்துவ நாடுகளுடன் 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகள் உள்ளன.

Thu, 06/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை