சீனாவுக்கு எதிராக நீதிமன்றம் செல்ல ஐ. ஒன்றியம் திட்டம்

ஹொங்கொங் விவகாரம்:

சீனா சர்ச்சைக்குரிய புதிய பாதுகாப்புச் சட்டத்தை ஹொங்கொங்கில் நடைமுறைப்படுத்தினால் அந்த விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்துக்கு எடுத்துச்செல்ல ஐரோப்பிய ஒன்றியம் முடிவெடுத்துள்ளது.

அதற்கு அனுமதிக்கும் தீர்மானத்தை ஐரோப்பிய பாராளுமன்றம் மிகப் பெரும்பான்மை வாக்குகளோடு நிறைவேற்றியது.

பாதுகாப்புச் சட்டத்தை அறிமுகம் செய்வதிலிருந்து சீனாவைத் தடுக்கும் விதமாக, பொருளாதார ரீதியான நடவடிக்கைகளை எடுக்க ஒன்றியத்துக்கு அழைப்பு விடுத்து ஐரோப்பிய பாராளுமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை வாக்களித்தது. இந்நிலையில் ஒன்றியத்தின் அந்தத் தீர்மானத்தைச் சீனா சாடியுள்ளது. இது தேவையற்ற குறைகூறல் என்று பீஜிங் கூறியது.

புதிய பாதுகாப்புச் சட்டம், முழுக்க முழுக்கத் தனது உள்நாட்டு விவகாரம் என்று சீனா குறிப்பிட்டுள்ளது.

ஆனால் அது ஹொங்கொங்கின் தன்னாட்சி உரிமை மீது தொடுக்கப்படும் கடுமையான தாக்குதல் என ஐரோப்பிய ஒன்றியம் கருதுகிறது.

அந்த விவகாரம் குறித்து ஒன்றியத் தலைவர்களும் சீனப் பிரதமர் லி கென்சியாங்கும் இன்று வீடியோ மூலம் விவாதிக்கவுள்ளனர்.

Mon, 06/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை