தொடர்ச்சியாக நிகழும் மர்ம வானொலி சமிக்ஞை

பில்லியன் கணக்கான ஒளியாண்டு தொலைவில் இருக்கும் பால்மண்டலம் ஒன்றில் இருந்து சுழற்சி முறையில் வெளியாகும் பாரிய வானோலி சமிக்ஞை ஒன்றை வானிய லாளர்கள் அவதானித்துள்ளனர்.

விரைவு ரேடியோ வெடிப்பு என்று அறியப்படும் இந்த வானொலி சமிக்ஞை முதல் முறை 2007 ஆம் ஆண்டு பூமிக்கு பல ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் பால்மண்டலத்தில் இருந்து வெளியாவது கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் இந்த சமிக்ஞை வெளிவருவதற்கான காரணம் விஞ்ஞானிகளிடையே இன்னும் மர்மமாகவே உள்ளது.

இந்த ரேடியோ சமிக்ஞையானது எமது சூரியனின் முழு நூற்றாண்டு சக்தியைக் போன்று ஒரு கன வினாடிகளில் அபரிமிதமான சக்தியை வெளிப்படுத்துவதாகும். இந்நிலையில் இவ்வாறான தொடர்ச்சியான வானொலி சமிக்ஞை வடிவம் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த சுழற்சி வானொலி சமிக்ஞையில், 90 நாள் இடைவெளியில் ரேடியோ வெடிப்ப நிகழ்கிறது. தொடர்ந்து 67 நாட்கள் அமைதி நிலவுகிறது. 157 நாட்களுக்கு ஒருமுறை இந்த சுழற்சி இடம்பெறுகிறது.

Wed, 06/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை