ஐபிஎல் போட்டிக்காக ஆசிய கிண்ணம் இரத்து செய்யப்படாது

பாகிஸ்தான்

ஐபிஎல் 2020 லீக்கை நடத்துவதற்காக ஆசிய கிண்ணம் இரத்து செய்யப்படும் என்ற யூகத்திற்கு வாய்ப்பே இல்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் அக்டோபர் - நவம்பர் மாதத்தில் நடைபெற இருக்கும் ரி 20 உலக கிண்ணம் இரத்து செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அந்த நேரத்தில் ஐபிஎல் 2020 சீசனை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.

இதற்கு முன் ஆசிய கிண்ண ரி 20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. இந்த சூழ்நிலையில் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடர் நடைபெற வாய்ப்பு இல்லை என்று சொல்லப்படுகிறது.

ஆனால், ஐபிஎல் போட்டிக்குப் பதிலாக ஆசிய கிண்ணம் இரத்து செய்யப்படும் என்ற யூகத்திற்கு வாய்ப்பே இல்லை. ஆசிய கோப்பை தொடர் இலங்கை அல்லது ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்த இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாக இயக்குனர் வாசிம் கான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வாசிம் கான் கூறுகையில் ‘‘ஆசிய கிண்ணம் திட்டமிட்டபடி நடக்கும். இங்கிலாந்தில் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி செப்டம்பர் 2-ம் திகதி திரும்பிவிடும். ஆகவே, செப்டம்பர் அல்லது அக்டோபரில் எங்களால் தொடரை நடத்த முடியும்.

இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவு இல்லை என்பதால் அங்கு நடத்தப்படலாம். அவர்கள் முடியாது என்றால், ஐக்கிய அரபு இராச்சியம் எப்போதுமே தயாராக இருக்கிறது’’ என்றார்.

Fri, 06/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை