முகக்கவசங்களை பராமரிப்பது எப்படி?

உலகளாவிய தொற்று நோய் அச்சுறுத்தலில் இருந்து நம்மை காத்துக் கொள்ள தனிமைப்படுத்துதல், சமூக விலகல் போன்றவை தேவைப்படுகின்றன. வைரஸிலிருந்து நம்மை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள சரியான முகக்கவசங்கள்,கையுறைகள் போன்றவை இருப்பது அவசியம். ஆனால் அவற்றை சரியாக எப்படிப் பராமரிப்பது, எப்படி அகற்றுவது என்பது நிறைய பேருக்குத் தெரிவதில்லை.

பெரும்பாலான முகக்கவசங்கள் ​ெபாலியஸ்டர் மற்றும் பாலிகார்பனேட் போன்ற துணிகளால் ஆனவை. இந்த முகக்கவசங்கள் பக்ரீரியாக்களை தூரமாக வைக்க பயன்படுகின்றன. இதில் பயன்படுத்தப்படும் பொருட்கள் முகமூடியை திரவ எதிர்ப்பு ஆக்குகிறது. எனவே பருத்தி அடிப்படையிலான முகக்கவசங்களைப் பயன்படுத்துவது நல்லது. இது எமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க உதவி செய்யும். குறிப்பாக கொவிட்-19 நோயாளியுடன் தொடர்பு இல்லாதவர்கள் துணிமுகமூடிகளை சவர்க்கார நீரில் கழுவி மீண்டும் பயன்படுத்த வைத்துக் கொள்ளலாம்.

நாம் கவனத்தில் வைக்க வேண்டிய முக்கியமான காரணிகள் என்னவென்றால் பயன்படுத்தப்பட்ட முகமூடிகளை முறையாக அப்புறப்படுத்தா விட்டால் வைரஸ் சுற்றுச் சூழலுக்கு வெளிப்பட வாய்ப்பு உள்ளது. இது விரைவாக பரவுவதற்கு வழிவகுக்கும். எனவே பாதுகாப்பு பயன்பாட்டுக் கருவிகளை சுற்றுப்புறங்களுக்கு ஆபத்தாக மாற்றாமல் இருக்க குறிப்பிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

முகமூடிகள், கையுறைகள் மற்றும் சனிட்டைசர் வெற்றுப் போத்தல்களை மூடியுள்ள குப்பை தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும்.முடிந்த வரை மறுபடியும் பயன்படுத்தும் முகக்கவசங்களை பயன்படுத்துங்கள். இது நிறைய முகக்கவசங்கள் குப்பைகளில் போவதை தடுக்கும். அதே மாதிரி கொவிட் -19 நோயாளிகளுடன் தொடர்புடைய நபருக்கு என் 95 முகமூடிகள் அவசியம். அதே மாதிரி அல்க​ேஹால் வகை னிட்டைசரை பயன்படுத்துங்கள். பயன்பாட்டு பொருட்களை மூடி உள்ள குப்பை தொட்டியில் போட பழகுங்கள். அகற்றுவதற்கு என்று தனி பெட்டிகள், கொள்கலன்களை பயன்படுத்துங்கள்.

பயன்படுத்தப்பட்ட பாதுகாப்பு கருவிகளை திறந்த மற்றும் பொது இடங்களில் வீசுவதை நிறுத்த வேண்டும். ​ெபாலி புரொப்பிலீனால் செய்யப்பட்ட முகக்கவசம் மற்றும் பிற பாதுகாப்பு அங்கிகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இவற்றை அப்புறப்படுத்துவது என்பது கடினம்.

Thu, 06/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை