Header Ads

ஐரோப்பா, அமெரிக்காவெங்கும் அடிமைத்துவ சிலைகள் நீக்கம்

பிரிஸ்டல் நகரில் அடிமை வர்த்தகர் ஒருவரின் சிலை ஆர்ப்பாட்டக்காரர்களால் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து இனவாத சர்ச்சை காரணமாக மேலும் மூன்று சிலைகள் நீக்கப்பட்டுள்ளன.

லண்டனில் இருக்கும் அடிமை வர்த்தகர் ரொபர்ட் மில்லிகனின் சிலை கூடியிருந்தவர்களின் கரகோசத்துடன் கடந்த செவ்வாய்க்கிழமை நகர சபை ஊழியர்களால் அகற்றப்பட்டது. உள்ளூர் மக்களின் விருப்பத்துடனேயே இந்த சிலை அகற்றப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

டார்பிஷெரில் 18 ஆம் நூற்றாண்டு மதுபான விடுதி ஒன்றில் வைக்கப்பட்ட கறுப்பினத்தவர் ஒருவரின் உருவச் சிலை ஒன்றும் அகற்றப்பட்டுள்ளது.

இதேவேளை பெல்ஜியத்தின் அன்ட்வேர்ப் நகரில் இருக்கும் பெல்ஜியம் மன்னரும் கொங்கோ ஆட்சியாளருமாக இருந்த இரண்டாவது லியோபோல்டின் சிலையும் கடந்த வாரம் ஆர்ப்பாட்டக்காரர்களால் வீழ்த்தப்பட்டு தீமூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் கறுப்பினத்தவரான ஜோர்ஜ் பிளொயிட் பொலிஸ் பிடியில் உயிரிழந்ததை அடுத்து ஐரோப்பாவிலும் இனவாத எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை அமெரிக்காவின் ரிச்மன்ட் நகரில் கிறிஸ்டோபர் கொலம்பஸின் சிலையை ஆர்ப்பாட்டக்காரர்கள் கீழே வீழ்த்தி தீமூட்டிய நிலையில் அதனை அங்குள்ள ஏரி ஒன்றில் வீசியுள்ளனர். அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ் இனப்படுகொலையை பிரதிநிதித்துவப் படுத்துவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அதேபோன்று இனவாத ஆர்ப்பாட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்ட ஜெனரல் ரொபர்ட் ஈ லீயின் வெர்ஜினியாவில் உள்ள சிலையும் அகற்றப்பட்டுள்ளது. 1861 தொடக்கம் 1865 கலப்பகுதியில் இடம்பெற்ற அமெரிக்க சிவில் யுத்தத்தில் அடிமைத்துவத்திற்கு ஆதரவான படைக்கு ரொபர்ட் ஈ லீ தளபதியாக செயற்பட்டார்.

Thu, 06/11/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.