யானை - மனிதன் மோதல்; திட்டமிட்ட செயற்பாடு அவசியம்

வனஜீவராசிகள் அமைச்சு அதிகாரிகளுடன் பிரதமர் மஹிந்த ஆலோசனை

யானை- --_ மனிதர்களுக்கான மோதல்கள் தடுக்கப்படும்வரை அதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுக்குமாறு பிரதமர் தெரிவித்துள்ளார்

இனிவரும் காலங்களில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் அபிவிருத்தி முன் மொழிவுகள் நடைமுறைப்படுத்தப்படும்போது யானை- -மனிதன் மோதல்கள் ஏற்படாதவாறு திட்டமிட்டு நடைமுறைப்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.

மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளிடமே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். சரியான முறையில் திட்டங்கள் முன்னெடுக்கப்படாததால் தற்போது மிருகங்கள் கிரமப்பகுதிக்குள் ஊடுருவ ஆரம்பித்துள்ளன. இதன்காரணமாக யானை- -மனிதன் மோதல் உக்கிரமடைந்துள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் குறைந்த செலவில் பெருமளவு மக்கள் நன்மைபெறும் செயற் திட்டங்களை விரைவாக முன்னெடுக்குமாறும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நேற்றைய தினம் நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் ஐந்து வருட காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முறைகேடுகளுடனான திட்டம் போலன்றி நிதிக் கட்டுப்பாட்டுடன் பெருமளவு மக்கள் பயன்பெறும் திட்டங்களை எதிர்வரும் இரண்டு வருட காலத்தில் நடைமுறைப்படுத்த கவனம் செலுத்துமாறும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாரிய நெருக்கடிக்குள்ளாகியுள்ள யானை – மனிதர் மோதல் செயற்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் திட்டத்தையும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களையும் நடைமுறைப்படுத்துமாறும் பிரதமர் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மகாவலி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் நீர்ப்பாசன அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.ஸ

லோரன்ஸ் செல்வநாயகம்

Fri, 06/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை