நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்து வழமைக்கு

நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்து வழமைக்கு-Islandwide Tranport Back To Normal From June 08

முறைப்பாடுகளுக்கு 1955 அழைக்கவும்

கொழும்பு, கம்பஹா மாவட்டங்கள் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிடையேயுமான போக்குவரத்து சேவைகள் நாளை (08) முதல் வழமைக்கு திரும்புகின்றது.

போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்தார்.

கடந்த மார்ச் 20 ஆம் திகி முதல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதிலிருந்து, இன்று (07) வரை கொழும்பு, கம்பஹா மாவட்டங்களிடையேயான போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை, ஒரு சில தனியார் பஸ்களில் முறையற்ற வகையில் கட்டணங்கள் அறவிடப்படுவதாக பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.

ஆசனங்களுக்கிடையே சமூக இடைவெளி பேணப்பட வேண்டுமென்பதால் குறைவளவான பயணிகளே செல்வதாக தெரிவித்து இரு மடங்கு கட்டணம் அறவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்து வழமைக்கு-Islandwide Tranport Back To Normal From June 08

இது தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இவ்வாறு முறையற்ற வகையில் கட்டணங்களை அறிவிட எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை எனவும், அவ்வாறு முறையற்ற வகையில் கட்டணம் அறிவிடுவோர் தொடர்பில் 1955 எனும் தொலைபேசிக்கு அழைத்து தெரிவிக்குமாறு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த மே 13ஆம் திகதி முதல் ஆசன எண்ணிக்கைக்கு அமைய போக்குவரத்தை மேற்கொள்ள, போக்குவரத்து அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

அத்துடன், கொழும்பு, கம்பஹா மாவட்டங்களிடையே இன்று வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால், கொழும்பு செல்வதற்கான வழித்தட அனுமதி கொண்டவர்கள், கொழும்பிற்குள் நுழைய முடியாது என்பதால், அவர்களின் இறுதி நிறுத்தத்திற்கு அறவிடவேண்டிய கட்டணத்தை மாத்திரமே அறவிட வேண்டும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Sun, 06/07/2020 - 20:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை