சமூக நலன், பாதுகாப்பு, இருப்பு, உரிமை; ஒரு கட்சி எவ்வாறு இருக்க வேண்டுமென ரிஷாட் விளக்கம்

சமூக நலனுக்காகவும் அதன் இருப்பு, பாதுகாப்பு, உரிமை மற்றும் அபிவிருத்திகளை பெற்றுக்கொடுக்கும் ஓர் நிறுவனமாக கட்சி இருக்க வேண்டுமென்பதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெளிவாகவும் உறுதியாகவும் இருப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர் சட்டத்தரணி முஷர்ரப்பை ஆதரித்து பொத்துவிலில் நேற்று இடம்பெற்ற கூட்டத்திலே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

தற்போதைய காலகட்டம் மிகவும் நிதானமாக சிந்திக்க வேண்டிய ஒன்று. அதுவும் எதிர்கொள்ளவுள்ள தேர்தல், நமது சமூகத்தைப் பொறுத்தவரையில் முக்கியத்துவம் வாய்ந்தது. இதனை நாம் சரியாகப் பயன்படுத்தவில்லையெனின் வருந்த நேரிடும். அத்துடன், கைசேதப்பட வேண்டியிருக்கும். இவ்வாறானதொரு பாரிய அச்சம் நமக்கு இருக்கின்றது.

இன்று ஊடகங்களிலே மிகவும் பரபரப்பாக பேசப்படும் பிரதேசமாக பொத்துவில் விளங்குகின்றது. பொத்துவில்தான் தற்போது பிரதான கருப்பொருளாகவும் இருக்கின்றது. இங்கு கூடியிருக்கும் மக்களை பார்க்கும்போது, அவர்களிடம் அரசியல்தாகம் தெரிகின்றது. பொத்துவில் நிறைய வளங்களைக் கொண்டிருக்கின்றது. அத்துடன், மக்கள் செறிவாக வாழ்ந்த போதும், ‘இந்த மண்ணிலிருந்து ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகவில்லையே!’ என்ற குறை எல்லோரிடமும் தெரிகின்றது. எனவேதான், இம்முறை அந்த இலக்கை அடைவதற்காக, நமது கட்சியிலிருந்து ஆளுமையுள்ள, இந்த மண்ணில் பிறந்த ஒருவரை வேட்பாளராக்கியிருக்கின்றோம்.

இங்குள்ள மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு, நமது கட்சியின் பொத்துவில் வேட்பாளர் சட்டத்தரணி முஷர்ரபுக்கு புள்ளடியிட்டு வேட்பாளராக்கி சரியாகப் பயன்படுத்தி கொள்ளுங்கள்.பல்துறை ஆளுமையுள்ள சட்டத்தரணி முஷர்ரப்பை நீங்கள் வெற்றிபெறச் செய்தால், அவர் உங்கள் காலடிக்கு வந்து பணிபுரிவார். கடந்தகாலங்களில் நீங்கள் விட்ட தவறுகளை இம்முறை செய்ய வேண்டாம்.

 

Tue, 06/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை