சுற்றுச் சூழலை பாதுகாக்கும் விழிப்புணர்வு சைக்கிள் பயணம்

யாழ்ப்பாணம் குறூப் நிருபர்

“Save the globe by cycling” எனும் தொனிப்பொருளில் சுற்றுச்சூழலை காப்பாற்றும் நோக்கில் ஆர்.ஆர்.குணசேகர என்ற நபர் சைக்கிள் ஓடி இலங்கையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

அவரது சைக்கிள் ஓட்டம் யாழ்ப்பாணம் நல்லூர் சிவன் அம்மன் ஆலயத்தில் இருந்து நேற்றுக் காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகி நல்லூர் ஆலயத்தில் வழிபாட்டை நிறைவு செய்து அங்கிருந்து ஏ-9 வீதி வழியாக ஒவ்வொரு மாவட்டத்தையும் சென்றடையவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் அணுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு 1 பில்லியன் மரநடுகை திட்டத்தில் இவர் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று அங்கு மரங்களை நாட்டி மக்கள் மத்தியில் சுற்றாடல் தொடர்பான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

தற்போது நிலவும் கொவிட் -19 வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கான முயற்சியாக வேப்ப மரங்களை நடும் திட்டத்தை ஆரம்பித்துள்ளார். இவரின் இந்த முயற்சிக்கு பொது மக்களின் ஆதரவு வழங்க வேண்டுமென்பதுடன் தற்போது நிலவும் கொவிட் -19 வைரஸ் பிரச்சினையில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கான ஒரு முயற்சியாக இந்த விழிப்புணர்வு செயற்பாட்டினை அவர் முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Mon, 06/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை