கொங்கோ தலைநகரில் ஆர்ப்பாட்டம்: மூவர் பலி

கொரோனா முடக்கத்தை எதிர்த்து:

கொங்கோ தலைநகரில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக மூடப்பட்டிருக்கும் பிரதான சந்தையை மீண்டும் திறக்கக் கோரி நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தின்போது குறைந்தது மூவர் உயிரிழந்துள்ளனர்.

கின்சாசா சந்தையை மீண்டும் திறக்கக் கோரி கடந்த செவ்வாய்க்கிழமை ஒன்று திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க எச்சரிக்கை வேட்டுகள் செலுத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் இருவர் மின்சாரம் தாக்கியும் ஒருவர் சனநெரிசலில் சிக்கியும் உயிரிழந்ததாக மாகாண அரசு குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையாக கடந்த ஏப்ரல் ஆரம்பத்தில் இந்த சந்தை மூடப்பட்டது. அதன் தடுப்பு வெளியில் இருந்தே ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணி நடத்தினர்.

கொங்கோ ஜனநாயக குடியரசில் இதுவரை 4,359 கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 90 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் கின்சாசாவில் மாத்திரம் 3,864 பேர் நோய்ப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

Thu, 06/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை