வாகன வரிப் பத்திரம் தானியங்கி இயந்திரம் மூலம் வழங்கல்

வவுனியா மாவட்ட செயலகத்தில் வடமாகாண மோட்டார் போக்குவத்து திணைக்களத்தினால் வாகன வரிப் பத்திரம் தானியங்கி இயந்திரம் மூலம் வழங்கப்படுகின்றது.

வாகன வருமான உத்தரவுப் பத்திரத்தினை பெறுவதினை இலகுபடுத்தும் முகமாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் இணையத்தின் ஊடாக வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு மின்னஞ்சல் முகவரி, கிரடீட் காட் அல்லது டேபிட் காட், வாகனத்தின் பதிவுச்சான்றிதழ், வலுவில் உள்ள காப்புறுதிப்பத்திரம், இறுதியாகப்பெற்ற வாகன வருமான வரி அனுமதிப்பத்திரம் மற்றும் புகைப்பரிசோதனை அறிக்கை என்பன தேவையாகும்.

வாகன வருமான உத்தரவுப் பத்திரம் தானியங்கி இயந்திரத்திற்கு முன்பாக இணையத்தின் ஊடாக வாகன வருமான வரி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிப்பதற்கான படிமுறைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் மூலம் வாகன வரி அனுமதிப் பத்திரம் பெறும் நடவடிக்கை இலகுபடுத்தப்பட்டுள்ளது.

 

 

வவுனியா விசேட நிருபர்

Fri, 06/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை