சமூகத்திலிருந்து கொரோனா தொற்று முழுமையாக தடுப்பு

ஒரு இலட்சம் பேருக்கு PCR பரிசோதனை முன்னெடுப்பு

தற்போது கொவிட் 19 வைரஸ் இந்நாட்டு சமூகத்திலிருந்து முற்றாக இல்லதொழிக்கக்கூடியதாக அமைந்துள்ளதாக சுகாதர அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று தொடர்பில் இதுவரை ஒரு லட்சம் PCR பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்று நிலைமைக்கு ஆயத்தமாதல் மற்றும் பிரதிபலிப்பு நடவடிக்கைகளின் கீழ் தேசிய சுகாதார தொகுதியில் கொரோனா தொற்று நோய் தொடர்பான 500 PCR பரிசோதனைகளை நாளொன்றுக்கு மேற்கொள்ளும் நோக்கில் சுகாதார மற்றும் தேசிய வைத்திய அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் ஆலோசனைக்கமையவும் சுகாதார மற்றும் தேசிய வைத்திய சேவைகள் அமைச்சின் வேண்டுகோளின்படி ஆய்வுகூடமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் முல்லேரியா வைத்தியசாலையில் அதி தொழில்நுட்ப மூலக்கூறு உயிரியல் ஆய்வகம், உபகரணங்களுடன் கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. விசேட நோய்களை கண்டறியும் மூலக்கூறு உயிரியல் ஆய்வகத்தில் நேற்று (24) சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியினால் நேற்று திறந்து வைக்கப்பட்டது. எம்மிடமுள்ள ஆய்வுகூடங்கள் மூலம் நாளொன்றுக்கு 300 பரிசோதனைகள் மாத்திரமே செய்யக்கூடியதாக இருந்தது. தேவையேற்படின் இந்த ஆய்வுகூடத்தில் நாளொன்றுக்கு 1000 பரிசோதனைகளையும் செய்ய முடியும்.

இச் சந்தர்ப்பத்தில் இந்தப் பொறுப்பை ஏற்றுகொண்டமைக்காக முல்லேரியா வைத்தியசாலைப் பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது ஒரு இலட்சம் PCR பரிசோதனைகளை மேற்கொள்ள முடிந்ததையிட்டு நாம் மகிழ்ச்சியடையலாம். PCR பரிசோதனையை மேற்கொள்ள பல உபகரணங்களும், திரவங்களும் தேவையாகும். இந்த ஒரு உபகரணங்கள் கூட இல்லாமல் இப்பரிசோதனையை மேற்கொள்ள முடியாது. ஜனாதிபதியின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் நாம் தடடுப்பாடின்றி PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் மூலம் நோயாளிகளை அடையாளம் கண்டு சமூகத்திலிருந்து வேறுபடுத்தி இன்று கொவிட்-19 நோயை சமூகத்திலிருந்து முற்றாக அழிக்கக் கூடியதாகவுள்ளது. இவ்வைரஸ் எவ்வாறு பரவுகின்றது என்பது குறித்து இன்னும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

Thu, 06/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை