செக் குடியரசை போலந்து ‘தவறுதலாக’ ஆக்கிரமிப்பு

செக் குடியரசை கடந்த மாதம் தவறுதலாக சிறிது காலம் ஆக்கிரமித்ததை போலந்து பாதுகாப்பு அமைச்சு ஒப்புக்கொண்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கையாக எல்லையை பாதுகாக்கும் போலந்து துருப்புகள் செக் குடியரசு பக்கம் உள்ள தேவாலயம் ஒன்றில் நிலைகொண்டிருந்துள்ளது. அவர்கள் பல நாட்கள் அவ்வாறு இருந்துள்ளனர்.

அந்தப் படையினர் செக் மக்களை அந்தத் தலத்திற்கு வருவதையும் தடுத்துள்ளனர். செக் அதிகாரிகள் இறுதியில் போலந்து நிர்வாகத்தை தொடர்புகொண்டு முறையிட்டுள்ளனர்.

வடகிழக்கு மர்வியாவில் வரலாற்று முக்கியம் வாய்ந்த சிலசி பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தவறுதலாக இடம்பெற்றது என்று போலந்து குறிப்பிட்டபோதும், தமக்கு இன்னும் உத்தியோகபூர்வமாக விளக்கம் கிடைக்கவில்லை என்று செக் குடியரசு குறிப்பிட்டுள்ளது.

Mon, 06/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை