ஹம்பாந்தோட்டை ஸாஹிரா தேசியக் கல்லூரி அணி மூன்றாவது சுற்றிற்கு தகுதி

ஹம்பாந்தோட்டை ஸாஹிரா தேசியக் கல்லூரி 13 வயதின் கீழ் 03 ஆம் பிரிவு பாடசாலைகளுக்கிடையிலான கடின பந்து கிரிக்கெட் போட்டியில் மூன்று போட்டிகளில் கலந்து கொண்டு மூன்று போட்டிகளிலும் வெற்றியை பெற்று மூன்றாம் சுற்றிற்கு தெரிவு செய்யப்பட்டது.

முதல் போட்டி அங்குனுகொலபெலஸ்ஸ மகாநாக மகாவித்தியாலத்துடன் இடம் பெற்றதோடு முதலில் துடுப்பெடுத்தாடிய மகாநாக மகா வித்தியாலய அணியினர் முதல் இன்னிங்ஸில் 58 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தனர். இதில் எஸ்.எச்.டி. பவித்ர 12 ஓட்டங்களை பெற்றதோடு பந்து வீச்சில் எம். எஸ் மொஹமட் 19 ஓட்டங்களுக்கு 06 விக்கெட்டுக்களையும் எம். ஆகிப் இர்பான் 02 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். இரண்டாவது இன்னிங்ஸில் மகாநாக மகாவித்தியாலய அணியினர் 92 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தனர். இதில் எம். எஸ் மொஹமட் 35 ஓட்டங்களுக்கு 07 விக்கெட்டுக்களையும் எம். டி. நஸ்வான் 30 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய ஹம்பாந்தோட்டை ஸாஹிரா தேசியக் கல்லூரி அணியினர் 136 ஓட்டங்களை 07 விக்கெட்டுக்களை இழந்து துடுப்பாட்டத்தை இடைநிறுத்தினர். இதில் எம். எஸ் மொஹமட் 55 ஓட்டங்களையும் எம். டி. நஸ்வான் 45 ஓட்டங்களையும் பெற்றதோடு பந்து வீச்சில் ஏ. ஜீ. லஹிரு 17 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்.

இரண்டாவது போட்டி திஸ்ஸமகாராமை தெபரவௌ மத்திய கல்லூரியுடன் இடம்பெற்றதோடு முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய ஹம்பாந்தோட்டை ஸாஹிரா தேசியக் கல்லூரி அணியினர் 229 ஓட்டங்களை 03 விக்கெட்டுக்களை இழந்து துடுப்பாட்டத்தை இடைநிறுத்தினர். இதில் எம். எஸ் மொஹமட் 172 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.

முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய தெபரவௌ மத்திய கல்லூரி அணியினர் 92 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தனர். இதில் எம். எஸ் மொஹமட் 39 ஓட்டங்களுக்கு 06 விக்கெட்டுக்களையும் பெற்றார். இரண்டாவது இன்னிங்ஸில் தெபரவௌ மத்திய கல்லூரி அணியினர் 64 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களையும் இழந்தனர். இதில் ஏ. கே. சமோத் 29 ஓட்டங்களையும் பெற்றார்.

மூன்றாவது போட்டி தெனியாய மத்திய கல்லூரியுடன் இடம்பெற்றதோடு முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய ஹம்பாந்தோட்டை ஸாஹிரா தேசியக் கல்லூரி அணியினர் 286 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களை இழந்தனர். இதில் எம். ஆகிப் இர்பான் 85 ஓட்டங்களையும் எம். டி. நஸ்வான் 45 ஓட்டங்களையும் பெற்றனர். இரண்டாவது இன்னிங்ஸில் ஸாஹிரா தேசியக் கல்லூரி அணியினர் 98 ஓட்டங்களை 02 விக்கெட்டுகளை இழந்து பெற்றனர்.

இதில் எம். எஸ் மொஹமட் ஆட்டமிழக்காமல் 72 ஓட்டங்களை பெற்றார்.

முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய தெனியாய மத்திய கல்லூரி அணியினர் 72 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தனர். இதில் எம். எஸ் மொஹமட் 24 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுகளையும் எம். ஆகிப் இர்பான் 20 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஹம்பாந்தோட்டை ஸாஹிரா தேசியக் கல்லூரி அணியின் சார்பில் எம். எஸ் மொஹமட், எம். டி. நஸ்வான், எம். ஆகிப் இர்பான் ஆகியோர் இப் போட்டிகளில் விசேட திறமைகளை வெளிக்காட்டியதோடு ஹம்பாந்தோட்டை ஸாஹிரா தேசியக் கல்லூரி அணியினர் குழு சாம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டு மூன்றாவது சுற்றிற்கு தகுதி பெற்றுள்ளது.

ஹம்பாந்தோட்டை குறூப் நிருபர்

Sat, 06/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை