இனவெறி தாக்குதலுக்கு உள்ளான திசர பெரேரா:

காலம் கடந்து கசிந்த உண்மை!

இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான திசர பெரேராவும், தானும் ஐ.பி.எல். ரி-20 தொடரின் போது இனவெறி தாக்குதலுக்கு உள்ளானதாக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டேரன் சேமி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நீதிக்கோரி உலகம் முழுவதும் நீதிக் குரல் ஒலித்து வருகின்றது.

இந்தநிலையில், இந்த சம்பவம் குறித்து அனைத்துவகை விளையாட்டு வீரர்களும் தங்களுக்கு நிகழ்ந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டு வருகின்றனர். இதற்கமைய, மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டேரன் சேமி, இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் போது தன்னிடமும், திசர பெரேராவிடமும் இனவெறி பாகுபாடு காட்டப்பட்டதாக புகாரொன்றை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய போது என்னையும், இலங்கை வீரர் திசர பெரேராவையும் ‘களு’ என்றே அழைப்பார்கள். அப்போது இந்த வார்த்தைக்கு அர்த்தம் கறுப்பு நிறத்தை சேர்ந்த வலுவான மனிதர் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

பிறகு அது கறுப்பு இனத்தை கிண்டல் செய்ய கூறப்படும் வார்த்தை என்று அறிந்ததும் இப்போது கோபம் தான் வருகிறது’ என கூறினார்.

 

Tue, 06/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை