ஒரு மாத காலத்திற்குள் புனரமைப்புச் செய்ய மத்திய மாகாண ஆளுநர் நடவடிக்கை

மாத்தளை பேனார்ட் அலுவிகார மைதானம்

நீண்டகாலமாக கவனிப்பாரற்றுக் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட மாத்தளை பேனார்ட் அலுவிகார மைதானத்தை ஒரு மாத காலததிற்குள் புனரமைப்புச் செய்ய மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே நடவடிக்கை எடுத்துள்ளார்.

மாத்தனை மாவட்டம் மற்றுமன்றி மத்திய மாகாணத்தில் பல்வேறு விளையாட்டு வீரர்களை உருவாக்கிய மைதானமாக இது காணப்படுகிறது. ஹொக்கி வினையாட் துறையில் தேசிய வீரர்கள் பலரையும் மாத்தளை மாவட்டம் உருவாக்கியுள்ளது. அந்த வகையில் பேனார்ட் அலுவிகாரை மைதானமும் குறுப்பிட்ட பங்களிப்பைச் செய்துள்ளது.

மேற்படி மைதானம் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாக மத்திய மாகாண ஆளுநருக்குக் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து அங்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆளுநர் அவதானித்தார். மத்திய மாகாணத்திற்கு வளம் சேர்க்கும் ஒரு முக்கிய மைதானம் கைவிடப்பட்ட நிலையில் இருப்பது கண்டு அவர் அதிருப்தி வெளியிட்டார்.

அண்மையில் அங்கு அமைக்கப்பட்ட நீச்சல் தடாகம் டெங்கு நோய் பரப்பும் நுளம்புகளின் வாழ்விடமாக இருப்பதையும் ஆளுநர் அவதானிக்கத் தவறவில்லை.

எனவே இன்னும் ஒருமாதகாலத்திற்குள் அதனை புனரமைத்து பாவனைக்கு வசதி செய்யப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

அக்குறணை குறூப் நிருபர்

Tue, 06/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை