முடக்க நிலையை தொடர பாகிஸ்தானுக்கு பரிந்துரை

பாகிஸ்தானில் கொவிட்-19 வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீண்டும் அவ்வப்போது முடக்க நிலையை அறிவிக்கும்படி உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது.

முடக்கத்தைத் தளர்த்துவதற்கு நிறுவனம் குறிப்பிடும் நிலையைப் பாகிஸ்தான் இன்னும் எட்டவில்லை என்றும் அது கூறியது.

அங்கு கடந்த மாதம் முடக்கம் தளர்த்தப்பட்டதை அடுத்து, வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. கடந்த திங்கட்கிழமை மட்டும் 105 பேர் உயிரிழந்தனர். எனவே, பாகிஸ்தானில் மிக அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட பஞ்சாப், சிந்து ஆகிய மாநிலங்களில் அவ்வப்போது முடக்க நிலையை அறிவிக்கும்படி உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டது.

சுகாதாரக் கட்டமைப்பு நிலைகுலையாமல் இருக்க அவ்வாறு செய்வது அவசியம் என்று கூறப்பட்டது.

அப்பகுதிகளில் இரு வார இடைவெளியில் முடக்க நிலையை மீண்டும், மீண்டும் அறிவிக்கலாம் என்று அது ஆலோசனை விடுத்தது.

Thu, 06/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை