தமிழ், முஸ்லிம் வாக்குகள் தேவையில்லையென கூறவேயில்லை

வங்குரோத்து அரசியல் செய்யும் தமிழ்க்கட்சிகளே பீதியில் பிரசாரம்

அரசாங்கத்திற்கு தமிழ், முஸ்லிம் வாக்குகள் தேவையில்லையென்று நான் ஒருபோதும் கூறவில்லை.நான் சொல்லாதவற்றை எதிரணியிலுள்ள தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் திரிபுபடுத்தி கூறி வருவதாக கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அவ்வாறு நான் எங்காவது கூறியிருந்தால் குரல் பதிவுகளையோ பத்திரிகை செய்திகளையோ ஆதரங்களுடன் முன்வைக்குமாறும் அவர் சவால் விடுத்தார்.

கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலே அவர் இதனை தெரிவித்தார்.

தமிழ், முஸ்லிம்களிடம் நாம் வாக்குப் பிச்சை கேட்டு செல்ல மாட்டோமென அமைச்சர் விமல் வீரசங்க கூறியதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும் செய்தி தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,

நான் எங்கும் தமிழ், முஸ்லிம் வாக்குகள் தேவையில்லை என்று கூறவில்லை. இனவாத குழுக்கள் இவ்வாறு பொய் வதந்தி பரப்பி அரசியல்  இலாபம் பெற முயல்கின்றன.சிங்கள,தமிழ் ,முஸ்லிம் ஒற்றுமையை விரும்பாதவர்களே இதன் பின்னணியில் உள்ளனர். நான் இனவாதியாக இருந்தால் வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை முதலில் ஆரம்பிக்காமல் எம்பிலிபிடிய தொழிற்சாலையை ஆரம்பித்திருப்பேன். வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையை ரிஷாத் பதியுதீன் பழைய இரும்புக்கு விற்கத் தயாராக இருந்தார். நாம் வந்ததும் அதனை நிறுத்தி மீள உற்பத்திகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம். இதனால் அப்பகுதியிலுள்ள தமிழ், முஸ்லிம்கள் எமக்கு ஆதரவாக உள்ளனர். எனது உண்மையான சுயரூபம் தெரிந்தால் தமது இருப்பு பாதிக்கும் என்பதால் எம்மை பற்றி பொய்களை பரப்பி வருகின்றனர்.

தாங்களே பொய் செய்தியை வெளியிட்டு தாமே அதனை பற்றிக் கருத்தும் கூறி வருகின்றனர். (பா)

 

ஷம்ஸ் பாஹிம்

Thu, 06/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை