சகல பள்ளிவாயல்களிலும் நேற்று ஜும்ஆத் தொழுகைகள்

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நிறுத்தப்படிருந்த வெள்ளிக்கிழமை ஜும்ஆத்தொழுகைகள் நேற்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு சகல பள்ளிவாயல்களிலும் தொழுகைகள் நடாத்தப்பட்டன.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் நடுப்பகுதி முதல் மூடப்படிருந்த பள்ளிவாயல்களை மீண்டும் திறப்பதற்கான  அனுமதியை சுகாதாரத் துறையினர் பல நிபந்தனைகளுடன் கடந்த வாரம் வழங்கி இருந்தனர்.ஆனால் கூட்டு தொழுகைகள் மற்றும் ஜும் ஆத்தொழுகைகளுக்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை.இருப்பினும் இந்த வாரம் கூட்டு தொழுகைகள் மற்றும் ஜும் ஆத்தொழுகைகளுக்கான அனுமதி வழங்கப்பட்டதையடுத்து நேற்று கல்முனைப் பிரதேசத்திலுள்ள ஜும் ஆப்பள்ளிகள் மற்றும் தக்கியாக்களிலும் சுகாதாரத்துறையினர், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் வக்பு சபை ஆகியவற்றின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களுக்கு ஏற்ப சமூக இடைவெளி பேணப்பட்டு ஜும் ஆத்தொழுகைகள் நடாத்தப்பட்டன .

இதே வேளை முன்னர் போலல்லாது குத்பாப்பேருரைகள் அரை மணித்தியாலத்திற்குள் சுருக்கப்பட்டு தொழுகைகள் நடாத்தப்பட்டதையும் அவதானிக்க முடிந்தது.

 

 

எம்.எம்.ஜெஸ்மின்

Sat, 06/20/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை