லா லிகா: ரியல் சொசைடேட் அணியை வீழ்த்தி முதலிடத்தை பிடித்தது ரியல் மட்ரிட் அணி

லா லிகா கால்பந்து தொடரின் ரியல் சொசைடேட் அணிக்கெதிரான லீக் போட்டியொன்றில், ரியல் மட்ரிட் அணி வெற்றிபெற்றுள்ளது.

ரியால் அரினா விளையாட்டரங்கில் உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை நடைபெற்ற இப்போட்டியில், ஆரம்பம் முதலே இரண்டு அணிகளும் சிறப்பாக விளையாடின.

இதில் ரியல் மட்ரிட் அணியின் வீரரான செர்ஜியோ ராமோஸ் போட்டியின் 50ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி முதல் கோலை அடித்தார்.

இதன்பிறகு அணியின் மற்றொரு வீரரான கரிம் பென்செமா 70ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்தார்.

தொடர்ந்து, 83ஆவது நிமிடத்தில் ரியல் சொசைடேட் அணியின் வீரரான மிகெல் மரினோ ஆறுதல் கோலை புகுத்தினார்.

இதன்படி போட்டியின் இறுதியில் ரியல் மட்ரிட் அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.

லா லிகா கால்பந்து தொடரின் புள்ளிப்பட்டியலில், ரியல் மட்ரிட் அணி 65 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது. ரியல் சொசைடேட் அணி 47 புள்ளிகளுடன் 6ஆவது இடத்தை பிடித்தது.

 

Tue, 06/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை