பிரிட்டனில் கத்திக்குத்து தாக்குதலில் மூவர் பலி

பிரிட்டனின் ரீடிங் நகரில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதல் சம்பவம் ஒன்றில் மூவர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் மூவம் படுகாயம் அடைந்துள்ளனர்.

சம்பவ இடத்தில் பிடிபட்ட 25 வயது கொண்ட ரீடிங் நகரைச் சேர்ந்த ஒரு ஆடவர் கொலைச் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

போர்பூரி பூங்காவில் கடந்த சனிக்கிழமை இரவு இடம்பெற்றிக்கும் இந்த சம்பவத்தின்போது பலரும் கத்திக் குத்துக்கு இலக்காகி உள்ளனர்.

இந்தத் தாக்குதலை பொலிஸார் ஒரு பயங்கரவாதச் செயலாக அடையாளப்படுத்தாதபோதும் பயங்கரவாத தடுப்பு அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் இருந்து கைது செய்யப்பட்டிருக்கும் நபர் லிபிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சிறு குற்றங்களுக்காக இவர் ஏற்கனவே சிறை அனுபவத்தவர் என்று கூறப்படுகிறது.

பூங்காவில் மக்கள் நிரம்பி இருந்தபோது அங்கு வந்த நபர் புரியாத வார்த்தைகளால் கூச்சலிட்டுக்கொண்டே அங்கிருந்தவர்கள் மீது கத்தியால் குத்த அரம்பித்ததாக சம்பவத்தை பார்த்தவர்கள் விபரித்துள்ளனர். தொடர்ந்து பொலிஸ் அதிகாரி ஒருவர் அவரை மடக்கிப் பிடித்துள்ளார்.

தாக்குதல் நேர்ந்த பூங்கா பகுதியில் இனவாத எதிர்ப்புப் பேரணி ஒன்று நடைபெற்றதாகக் கூறப்பட்டது. ஆனால், அதற்கும் தாக்குதலுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை என்று பேரணி ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

Mon, 06/22/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை