“ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் அமெரிக்கா இரட்டை வேடம்”

அமெரிக்கா வன்முறை மிக்க ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் இரட்டை வேடம் போடுவதாக ஹொங்கொங்கின் தலைமை நிர்வாகி கேரி லாம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக நடந்துவரும் கலவரங்களை மாநில அரசுகள் கையாண்டு வரும் விதத்தை அவர் சுட்டிக்காட்டினார். ஆனால் ஹொங்கொங்கில் அதேபோன்ற கலவரங்கள் நடந்தபோது அமெரிக்கா பின்பற்றிய நிலைப்பாடு என்னவென்பது அனைவருக்கும் தெரியும் என்றார் அவர்.

சீனா அறிமுகப்படுத்த முயலும் புதிய பாதுகாப்புச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அண்மையில் ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அவற்றை ஹொங்கொங் கையாண்ட விதம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறை கூறியிருந்தார். அதைக் காரணம்காட்டி ஹொங்கொங்கிற்கு வழங்கப்பட்டுவரும் சில முக்கியச் சலுகைகளை மீட்டுக்கொள்வதாகவும் அவர் அறிவித்தார்.

அதுபற்றிக் குறிப்பிட்ட கேரி லாம், அமெரிக்கா அந்த நடவடிக்கைகள் மூலம் ஹொங்கொங்கிலுள்ள தனது நலன்களுக்குத் தானே பாதிப்பை ஏற்படுத்திக்கொள்வதாக தெரிவித்தார்.

Wed, 06/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை