விண்வெளியில் மர்மப் பொருள் கண்டுபிடிப்பு

இதுவரை அவதானிக்கப்படாத மர்மமான வானியல் பொருள் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அது உடைந்த நட்சத்திரங்கள் என்று அறியப்படும் ‘நியூட்ரோன் நட்சத்திரங்களை’ விட பெரிதானது என்பதோடு கருந்துளைகளை விடவும் சிறிதாக உள்ளது.

அமெரிக்கா மற்றும் இத்தாலியில் உள்ள ஈர்ப்பு அலை அவதானிப்பகங்களை பயன்படுத்தி சர்வதேச ஆய்வுக் குழு ஒன்றே இந்த கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ளது. சுமார் 800 ஒளியாண்டு தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இந்த மர்மப் பொருள் நமது சூரியனை விட இரண்டரை மடங்கு பெரிதாக இருப்பதாக அந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பு எமது புரிதலில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும் என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். இது பற்றி தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். நட்சத்திரங்கள் இறக்கும்போதே கருந்துளைகள் உரவாகின்றன. ஒரு சுப்பர்நோவாவாக வெடிக்கும் அளவு பெரியதாக இல்லாத நட்சத்திங்களின் எச்சம் நியூட்ரோன் நட்சத்திரங்களாக உருவெடுப்பதோடு அது சிறியதானது மற்றும் அதிக அடர்த்தியானதாக உள்ளது.

Fri, 06/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை