ஒரே இரவில் செல்வந்தரான தன்சானிய சுரங்க தொழிலாளி

தன்சானியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய இரு தான்சானைட் இரத்தினக் கற்களை விற்ற சுரங்கத் தொழிலாளி ஒருவர் ஒரே இரவில் பெரும் செல்வந்தராக மாறியுள்ளார்.

மொத்தம் 15 கிலோகிராம் எடை கொண்ட இந்த இரத்தினக் கற்களை சனினியு லெய்சர் என்ற சுரங்கத் தொழிலாளி 3.4 மில்லியன் டொலருக்கு சுரங்க அமைச்சுக்கு விற்றுள்ளார்.

“நாளை பெரும் கொண்டாட்டம் இருக்கிறது” என்று 30க்கும் அதிகமான குழந்தைகளின் தந்தையான லெய்சர் தெரிவித்தார்.

தான்சானைட் இரத்தினக் கற்கள் வடக்கு தன்சானியாவில் மாத்திரமே கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதோடு ஆபரணங்கள் தயாரிப்பதற்கு அது பயன்படுத்தப்படுகிறது.

உலகின் மிக அரிதான இரத்தினக் கற்களில் ஒன்றாக கருதப்படும் இதன் விநியோகம் அடுத்த 20 ஆண்டுகளுக்குள் முழுமையாக ஒழிந்துவிடும் என்று உள்நாட்டு புவியியலாளர்கள் கணித்துள்ளனர்.

இந்நிலையில் லெய்சர் கடந்த வாரம் 9.2 கிலோ மற்றும் 5.8 கிலோ இரத்தினக் கற்களை கண்டுபிடித்ததற்கு தன்சானிய ஜனாதிபதி ஜோன் மகுபுலி அவரை தொலைபேசியில் அழைத்து வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.

Fri, 06/26/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை