நியூயோர்க் நகரில் கட்டுப்பாடு தளர்வு

அமெரிக்காவில் கொவிட்-–19 நோய்த் தொற்றால் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நியூயோர்க் நகர் கட்டுப்பாடுகளைத் தளர்த்த ஆரம்பித்துள்ளது.

சில்லறை வர்த்தகம், கட்டுமானம், உற்பத்தி ஆகிய பல்வேறு துறைகள் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நியூயோர்க் மாநிலம் அனுமதித்துள்ளது.

நியூயோர்க்கில், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முதலாம் நபர் அடையாளம் காணப்பட்டு நேற்றுடன் 100 நாட்களாகிவிட்டன. இருப்பினும், தொடர்ந்து உச்ச விழிப்பு நிலையில் இருக்கும்படி நியூயோர்க் ஆளுநர் அன்ட்ரூ கியுமோ குடியிருப்பாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

நியூயோர்க்கில் மட்டும் 383,000க்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 வைரஸ் தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது.

Wed, 06/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை