செஞ்சிலுவைச் சங்கத்தினால் நிவாரணம்

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கமும் இணைந்து, 24 மாவட்டங்களுக்கு அவசர நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

இது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

கொரோனா வைரஸினால் வாழ்வாதார அச்சுறுத்தலுக்கு உள்ளான சமூகத்தின் மிகவும் பாதிப்புக்குள்ளான பிரிவுகளிலுள்ள உறுப்பினர்கள் குறித்த உதவிகளை பெற்றுள்ளளனர்.  

கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு உதவும் நோக்கில் குறித்த உதவித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதில், 1,500 வீடுகளுக்கு உணவுப் பொருட்கள் கொண்ட நிவாரணப் பொதிகளும், 5,700 வீடுகளுக்கு வவுச்சர்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

உணவுப் பொருட்கள் கொண்ட நிவாரணப் பொதி அல்லது வவுச்சரானது, 05 பேரைக் கொண்ட குடும்பமொன்றிற்கு  ஒரு வாரத்திற்கான தேவைகளை பூர்த்தி செய்யும். அதில் அரிசி, பருப்பு, சீனி, உப்பு, ரின் மீன், கோதுமை மா, பாசிப்பயறு, கருவாடு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அடங்குகின்றன. 

குடியிருப்பாளர்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வவுச்சர்கள் அமைந்துள்ளதென, குறித்த  அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிவாரண உதவியின் நோக்கமானது, மிகவும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் அன்றாட உணவு நுகர்வை அதிகரிப்பதும், ஏனைய உதவி வழிமுறைகள் மற்றும் நிலைபேறான நடவடிக்கைகளை பயனுள்ளதாக அமையும் வரை குறுகிய காலம் வரை போதிய ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரத்தை பராமரிப்பதும் ஆகும்.


 

Thu, 06/04/2020 - 13:07


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை