தர்காநகர் தாரிக்கிற்கு நீதி கிடைக்க ஹக்கீம், நாமலுடன் பலர் இணைவு

அளுத்கம , தர்கா நகர் பகுதியைச் சேர்ந்த 14 வயதான விஷேட தேவையுடைய சிறுவன் தாரிக் அஹமட் கடந்த மாதம் 25ம் திகதி வீட்டை விட்டு வெளியேறி வீதிக்கு வந்தவேளை பொலிஸாரினால் தாக்கப்பட்டார்.  

கடந்த 25 ம் திகதி ஊரடங்கு வேளை, துவிச்சக்கர வண்டியில் சுற்றித்திரிந்த தாரிக், தர்கா நகரின் அம்பகஹ சந்தியை அடைந்த வேளை அங்கு காவலரணில் கடமையிலிருந்த பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். பொலிஸார் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கத் தவறியமையால் தாக்கியுள்ளனர்.  

இதையடுத்து தாரிக்கின் தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். ஆனாலும் நீதி கிடைக்கவில்லை. அப்பிரதேசத்துக்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.  

அண்மைக் காலமாக ஊரடங்கு அமுலில் இருந்தால் அதை மீறியவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இதற்காகவே JusticeForThariq தாரிக்கிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற செயற்திட்டத்துக்கு முன்னாள் எம்.பி நாமல் ராஜபக்‌ஷ, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், முன்னாள் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்தன ஆகியோர் உள்ளடங்கலாக பிரபலமான அரசியல் தலைவர்கள், பேராசிரியர்கள், சட்டத்தரணிகள், சமூக ஆர்வலர்கள் போன்றோர் என்னுடன் மும்முரமாக இணைந்து செயலாற்ற ஆரம்பித்திருக்கிறார்கள். 

இச் சிறுவனுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கான குரல் ஓங்கி வரும் நிலையில் அதற்கான நியாயம் கிடைக்கும் என முழுமையாக எதிர்பார்க்கப்படுகிறது.   

Sun, 06/07/2020 - 07:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை