தெற்கின் தூதர்களை வடகொரியா நிராகரிப்பு

வட கொரியாவுக்கு சிறப்பு தூதர்களை அனுப்ப தென் கொரியா முன்வந்ததை வட கொரியா நிராகரித்துள்ளது.

இரு கொரியாக்களுக்கும் இடையிலான அமைதி உடன்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர அது தீர்மானித்துள்ளது. அதை முன்னிட்டு அடுத்த கட்ட நடவடிக்கையாக, இராணுவமற்ற பகுதிக்குள் மீண்டும் தனது துருப்புகளை அனுப்பப்போவதாக வட கொரியா சூளுரைத்தது.

இரு கொரியாக்களின் கூட்டுத் தொடர்பு அலுவலகத்தை வட கொரியா கடந்த செவ்வாய்க்கிழமை வெடிவைத்துத் தகர்த்தது.

இரு நாடுகளின் தலைவர்களும் இணக்கம் தெரிவித்ததற்கு ஏற்ப 2018ஆம் ஆண்டு இராணுவமற்ற எல்லைப் பகுதியில் தொடர்பு அலுவலகம் உருவாக்கப்பட்டது.

வட கொரியாவிலிருந்து தென் கொரியாவுக்குத் தப்பிச் சென்றவர்கள், வட கொரியா மீது அவதூறு பரப்பும் நோக்கில் துண்டுப் பிரசுரங்களை அண்மையில் அனுப்பினர். அதையடுத்தே இரு கொரியாக்களுக்கும் இடையே பதற்றம் மூண்டது.

Thu, 06/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை