தேர்தல் நடத்துவதற்கு ஏதுவான சுகாதார ஆலோசனை வழிகாட்டல் அறிக்கை

வார இறுதிக்குள் வெளியீடு; உச்ச நீதிமன்றில் சட்ட மாஅதிபர்

பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக சுகாதார ஆலோசனைகளடங்கிய வழிகாட்டல் அறிக்கை இவ்வார இறுதிக்குள் வெளியிடப்படவிருப்பதாக சட்ட மாஅதிபர் நேற்று உச்ச நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

சட்ட மாஅதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்திக தெமுனி டி சில்வா ஐந்து நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் சட்ட மாஅதிபரின் இந்த அறிவிப்பை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் இது தொடர்பில் விளக்கமளிக்கையில்,

உரிய அதிகாரிகளை கொண்டு சுகாதார ஆலோசனை வழிகாட்டல் அறிக்கையின் தயாரிப்பு பணிகள் முடியும் தருவாயிலுள்ளது. அந்த அறிக்கை இந்த வாரத்தில் வெளியிடப்படும் என  மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்திக தெமுனி டி சில்வா தெரிவித்தார்.

சுகாதாரத்துறையினரின் ஆலோசனைக்கு இணங்க தேர்தலை நடத்த தயாராவதற்கு மேலும் 60 அல்லது 70 தினங்கள் தேவைப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)

எம். ஏ. எம். நிலாம்

Tue, 06/02/2020 - 10:19


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை