காணி எல்லைப்படுத்தலுக்கு புதுக்குடியிருப்பில் எதிர்ப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து எல்லைப்படுத்தும் நடவடிக்கையில் மாவட்ட நில அளவைத் திணைக்களம் ஈடுபட்டுள்ளமைக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

புதுக்குடியிருப்பு பிரதேச எல்லைக்குட்பட்ட தண்டுவான் பகுதியில் நில அளவைத் திணைக்களத்தின் நடவடிக்கை நேற்று காலை முன்னெடுக்கப்பட்ட போது மக்கள் எதிர்ப்பு ஒன்று திரட்டு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்கள்.

முல்லைத்தீவு ஏ-35 மற்றும் ஏ-9 வீதிகளிகளிலும் இந்த முதன்மை வீதிகளில் இருந்து பிரிந்து செல்லும் கிளை வீதிகளிலும் மக்களுக்கு சொந்தமான காணிகளை எல்லைப்படுத்தும் நடவடிக்கையில் மாவட்ட நில அளவைத்திணைக்களம் ஈடுபட்டது.

மக்கள் கூட்டத்தினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நில அளவைத்திணைக்கள அதிகாரிக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. அதனையடுத்து சம்பவ இடத்திற்கு ஒட்டுசுட்டான் பொலிஸார் சென்றனர்.

பொலிஸார் மக்களின் பிரச்சினையினை சுமூகமாக்க முயற்சித்த வேளை மக்களின் எதிர்பினை தொடர்ந்து இது குறித்து பிரதேச செயலாளரிடம் இன்று எழுத்துமூலம் முறையிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

 

புதுக்குடியிருப்பு நிருபர்

Thu, 06/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை